வங்கதேசத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்ததாக தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூரில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ஜான் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவிதாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
அவரிடம் இருந்த தமிழ்நாடு அரசின் அடையாள அட்டையை பறிமுதல் செய்த வங்கதேச ராணுவம், இந்திய ராணுவத்திடம் தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கைதான ஜான் செல்வராஜிடம் இருந்து ஏராளமான அமெரிக்க டாலர்கள், இந்திய பணம் மற்றும் இந்திய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஜான் செல்வராஜ், எதற்காக வங்கதேசம் வந்தார்.
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
அவருக்கும், சர்வதேச ஹவாலா கும்பலுக்கும் தொடர்பா? அல்லது சர்வதேச போதைப்பொருட்கள் கடத்தலில் அவர் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் வங்கதேச ராணுவம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 19- ஆம் தேதி விடுப்பில் சென்ற ஜான் செல்வராஜ், மார்ச் 21- ஆம் தேதி பணிக்கு திரும்ப வேண்டிய நிலையில், வரவில்லை என்றும், அவர் பணியில் தொடர்ச்சியாக இவ்வாறு செல்வது வழக்கமாகக் கொண்டவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.