தமிழகத்தில் கரூர் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 56 நபர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் மக்களவைத் தொகுதி மாறியுள்ளது.
மது போதையில் சுற்றித் திரிந்த பெண்ணிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்
அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என கரூரில் போட்டியிட 62 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். நேற்று (மார்ச் 29) நடைபெற்ற வேட்பு மனு மீதான பரிசீலனையின் போது, 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இன்று (மார்ச் 30) வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் என்பதால் சிலர் வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம்.
பா.ஜ.க. கூட்டணிக்கு சென்ற எம்.பி…. வழக்கை முடித்து வைத்த சி.பி.ஐ.!
இன்று (மார்ச் 30) மாலை 05.00 மணிக்கு கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் இன்று மாலை வெளியானதுடன், வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம், பெயர் பொருத்தும் பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.