spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 50.80% வாக்குகள் பதிவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 50.80% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன் தினம் ஓய்வடைந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் உள்ளனர். 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி 50.80% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 59.55% வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தூய்மை பணியாளரை காரில் அழைத்துச் சென்ற தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ்
00:55
Video thumbnail
மதுரை நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
01:08
Video thumbnail
நடிகர் விஜயை கண்டித்து அதிமுகவினர் போஸ்டர்
00:40
Video thumbnail
77வது குடியரசு தினத்தில் 4 சிமெண்ட் மூடைகள்! Yoke–Farmers–Zerchers Walk சாதனை | குமரி மாவட்ட கண்ணன்
01:17
Video thumbnail
அம்பத்தூர்- மேனம்பேடு சாலையில் திடிரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்
00:58
Video thumbnail
77வது குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
01:11
Video thumbnail
சென்னை குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் பாடலுக்கு மாணவிகள் நடனம்
02:03
Video thumbnail
சாதனைகள், வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:04
Video thumbnail
77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
01:28
Video thumbnail
நாங்கள் தான் மீண்டும் வருவோம்.. - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
01:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img