spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அடுத்த 5 தினங்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் – வானிலை ஆய்வு மையம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வெப்ப நிலையில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 27.04.2024 முதல் 01.05.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 27.04.2024 முதல் 01.05.2024 வரை தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
“அநியாயத்தின் உச்சகட்டம்”- ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை சனம் ஷெட்டி
00:55
Video thumbnail
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:49
Video thumbnail
மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது
10:58
Video thumbnail
காவலரை, போக்குவரத்துக் காவலர் தாக்கிய வீடியோ; மெரினாவில் வாகனங்களுக்கு அபராதம் விதித்ததால் தகராறு
00:54
Video thumbnail
நானும் விஜய் சாரை வைத்து படம் பண்ணினேன். சென்சாரில் பிரச்சினை வந்தது
02:06
Video thumbnail
8 நிமிடத்தில் 500 ஆங்கில வார்த்தைகளை கூறி அசத்திய அரசு பள்ளி மாணவன்
01:36
Video thumbnail
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் வாசல் வரை வந்து அன்புமணியை வழி அனுப்பிய இபிஎஸ்
00:31
Video thumbnail
பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
00:43
Video thumbnail
ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரிசனம்
00:49
Video thumbnail
அதிமுக ஆட்சியமைக்கும் - அன்புமணி | Edappadi Palaniswami | Anbumani
01:38
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img