நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்.பி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்க்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நின்று வெற்றி பெற்ற கனிமொழி தற்போது அதே தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி நேற்று திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ லட்சுமிபுரம் தண்ணீர் தொட்டி, ஓடக்கரை ரெட் ஸ்டார் சங்கம் அருகில், YUF சங்கம் முனை, கோமான் மேலத்தெரு, பெரிய சதுக்கை சந்திப்பு மற்றும் உச்சிமாகாளியம்மன் கோயில் தெரு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அதே போல் திருச்செந்தூர் தொகுதியான வரண்டியல் ஊராட்சி அலுவலகம் அருகிலும், பேயன்விளை பகுதியிலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் பேசிய கனிமொழி மகளிர் நலனே மாநிலத்தின் நலனாகக் கருதும் நம் தி.மு.கழகத்திற்குப் பெருகும் ஆதரவுகளினால், நமது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.