spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வெயில் சுட்டெரிக்கும்…! தமிழத்தின் 16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்பதால் அந்த 16 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°-43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும். அடுத்த மூன்று தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 01.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Video thumbnail
மாற்றம் வேண்டி மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் - நடிகர் சிவக்குமார்
02:40
Video thumbnail
MLA-களின் பெயரை வைத்து மக்கள் வாக்களிக்கவில்லை; சின்னத்திற்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்
00:58
Video thumbnail
டெல்லி பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய் #Vijay #CMVijay #Delhi #Tamilnadu
01:40
Video thumbnail
நீங்க தூயசக்தியா விஜய்! பித்தலாட்ட சக்தி - டி.டி.வி.தினகரன்
02:26
Video thumbnail
ரீல்ஸ் மூலம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு.. அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ வைரல்..
00:57
Video thumbnail
2வது நாளாக சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர்
02:51
Video thumbnail
தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை
01:32
Video thumbnail
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முதலாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்..
00:17
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்
01:19
Video thumbnail
மாமூல் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு.. தவெக நிர்வாகிக்கு எதிராக போராட்டம்
01:50
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img