திரூவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் மாதிரி வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலானது (2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் உள்ளனர். 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் நாகை மக்களவை தொகுதிக்குட்பட்ட திரூவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் மாதிரி வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரிசெய்யும் பணியின் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.