spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.02% வாக்குகள் பதிவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன் தினம் ஓய்வடைந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் உள்ளனர். 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 63.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

 

Video thumbnail
மோடியை எச்சரித்த ஸ்டாலின் | பாஜக அரசின் மிக மோசமான திட்டம் | MKStalin | Modi | DMK | BJP
10:30
Video thumbnail
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி நிலவரம் | விஜய்யின் செல்வாக்கு மொத்தமாக முடிந்தது | TVK | Vijay
18:38
Video thumbnail
மதுரவாயல் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..
01:47
Video thumbnail
"உங்களுக்காக இந்த இடத்தை உருவாக்கி தருவேன்" - அமைச்சர் நாசர் வாக்குறுதி
01:13
Video thumbnail
"81 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.." - அமைச்சர் நாசர்..
00:39
Video thumbnail
"தமிழக முதல்வரே நேரடியாக வந்து ஆய்வு செய்து.." - அமைச்சர் நாசர்..
00:51
Video thumbnail
மாஃபா பாண்டியராஜன் செய்த துரோகம்..
01:51
Video thumbnail
ஆவடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
01:21
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்..- தவெக தலைவர் விஜய்..
01:19
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.. - தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்
12:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img