தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன் தினம் ஓய்வடைந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் உள்ளனர். 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

காலை 7 மணிக்கு தொடங்ங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்களிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
Video thumbnail
பெரியார் மண்ணில் பாஜகவின் மதவேஷம் எடுபடாது
00:54
Video thumbnail
முருகன் மாநாடு - ஆன்மிகமா? அரசியலா?
01:00
Video thumbnail
இந்து அமைப்புகள் இந்துக்களுக்கு செய்த நன்மைகள்?
00:57
Video thumbnail
அடுக்குகளின் இலக்க எண்ணிக்கையை கூறி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 வயது சிறுவன்
00:52
Video thumbnail
முருகன் மாநாடு | தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள் | இந்து அமைப்புகள் இந்துக்களுக்கு செய்த நன்மைகள்?
13:33
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img