தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18.04.2024 0 19.04.2024: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 3° -5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் இடங்களில் 38°- 41° செல்சியஸ் இருக்கக்கூடும். மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக 20.04.2024- 21.04.2024, அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் 2° செல்சியஸ் படிப்படியாக 18.04.2024 ( 19.04.2024 2: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.