மேம்பால கட்டுமான பணி – சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக சென்னை மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும். வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ்) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு. மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.

சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Video thumbnail
2026 தேர்தல் - அதிமுக தவெக பாமக | அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? | DMK | TVK | ADMK | PMK | BJP
11:33
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள்..
00:58
Video thumbnail
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
01:01
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள் | பா ரஞ்சித் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:36
Video thumbnail
தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:49
Video thumbnail
"தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி"புதிய கட்சி கொடியை ஆம்ஸ்ட்ராங் மனைவி ஏற்றினார்..
01:12
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு
01:01
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு | புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் | CM Stalin | Oraniyil TamilNadu | DMK
11:50
Video thumbnail
மதிமுக தவெக கூட்டணி, பின்னணியில் பாஜக?
01:02
Video thumbnail
ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்திய மோடி
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img