நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திருச்சி மக்களவைத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @duraivaikooffl அவர்களை ஆதரித்து திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மதிமுகவின் ‘தீப்பெட்டி’ சின்னத்திற்கு வாக்குக் கேட்டு இன்று பிரச்சாரம் செய்தோம். 3 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளையும் – 10 ஆண்டுகளில் பாசிச மாடல் தந்த வேதனைகளையும் பட்டியலிட்டு ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்களிடம் எடுத்துக் கூறினோம். பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! என இவ்வாறு பேசினார்.