வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்களை மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல குதிரைகள் தராததால் தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்பு.
தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மலை கிராம மக்கள்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி அகமலை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கு இதுவரையில் சாலை வசதி இல்லை.
கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரி தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் சாலை வசதி செய்து தரவில்லை எனக் கூறி ஊரடி, ஊத்துக்காடு உள்ளிட்ட 10 மலை கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சோத்துப்பாறை அணை அருகே மலை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமர்ந்து ஆறு மணி நேரத்திற்கு மேலாக தேர்தலை புறக்கணிப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் தவித்து வருவது வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்ததோடு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஊத்துக்காட்டில் உள்ள 14 வது வாக்குச்சாவடிக்கு எப்பொழுதும் சோத்துப்பாறை அணை பகுதியில் இருந்து குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும். ஆனால் அந்த மலை கிராம மக்கள் சாலை வசதி செய்து தராததால் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை குதிரைகளில் கொண்டு செல்வதற்கு வழங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/tamilnadu-weather-report-6/1319
இதனால் வாக்குச்சாவடியின் 14- நம்பர் வாக்கு சாவடிக்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் மலை கிராம மக்கள் போராட்டம் நடத்தும் பகுதியிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.