நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை வைக்கக் கோரும் பரிந்துரையை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார்.
“கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை வைக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழ்நாடு ஆளுநருக்கு தீர்மானமானது அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும், ஆளுநரிடம் தீர்மானம் கிடப்பில் இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தார். நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்கக்கோரும் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார்.
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.