மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரியில் உள்ள கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஏழு மலைகளைத் தாண்டி சுயம்பு வடிவில் உள்ள சிவனை தரிசனம் செய்ய மார்ச், ஏப்ரல், மே என மாதங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். நடப்பாண்டிற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், மலையேறிய பக்தர்களில் 3 பேர் ஒரே நாளில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே, இதுப்போன்று 2 பேர் உயிரிழந்திருப்பதால் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. உயரமான மலைகள் என்பதால் கோயிலை அடைய நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மூச்சுத்திணறல் காரணமாக, உயிரிழப்புகள் ஏற்படுவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
“2 தொகுதிகளில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம்”- உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
இதுப்போன்ற உயிரிழப்புகளைத் தடுக்க வனத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இருதய நோய், மூச்சுத்திணறல், நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முதியவர்கள், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.