4 வயது சிறுவனின் வேர்ல்ட் ரெக்கார்டு
20 கிலோ மீட்டர் தூரம் இடைவிடாது சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்த 4 வயது சிறுவனுக்கு கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட புத்தகத்தில் அங்கீகாரம் கொடுத்து கெளரவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சார்விக் பரத். இச்சிறுவன், 1 மணி நேரம் 58 நிமிடங்களில் 20 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். இதனை கவுரவிக்கும் விதமாக கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு, சார்விக் பரத்துக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.
திட்டமிட்ட வரைபடத்தின்படி தாம்பரம் பகுதியில் உள்ள அகரம் முக்கிய சாலையிலிருந்து தொடங்கி, செம்பாக்கம் வரை இடைவிடாது 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி பரத் சாதனை படைத்துள்ளார்.
சார்விக்கின் சாதனை குறித்து அவரது தாய் கீதா பேசுகையில்,
சார்விக் பரத் தொடர்ந்து 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி, இந்த சாதனையை புரிந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
தொலைக்காட்சிகளில் பார்த்துவிட்டு, இந்த சாதனையை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் பயிற்சிக்கு பிறகு 20 கிலோமீட்டர் தூரத்தை 1 மணிநேரம் 58 நிமிடம் சைக்கிளை தொடர்ந்து ஓட்டி, இந்த சாதனையை சார்விக் பரத் புரிந்திருக்கிறார் என்றும் அவர் கூறினார். 4 வயதில் வேறு யாரும் இந்த சாதனையை முயற்சிக்கவில்லை, இவரே முதல் நபர் என்றார் தாய் கீதா தெரிவித்துள்ளார்.
https://www.mugavari.in/news/cinema-news/vadivasal-again-movie-updates/3068
சார்விக்கின் அடுத்த இலக்கு, 5 வயதிற்குள் 25 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பதே என்றும் அதற்கான முயற்சியில் மகன் இறங்கியுள்ளதாகவும் சாதனைச் சிறுவனின் தாய் கூறியுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…