spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கிய விவகாரத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

இந்த நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவத்தனையில் ஈடுபட்டதாக கூறி வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவரது எம்எல்ஏ விடுதி அறையிலும், அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது அறையின் சாவியை பெற்று அமலாக்கத்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர்த்து மேலும் 4 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img