செய்திகள்

த.வெ.க மாநாடு; 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3 டிஐஜி, 10 எஸ்.பி க்கள், 50 டி.எஸ்.பி க்கள் என மொத்தம் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. மாநாட்டு திடலில் அக்கட்சியின்  தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமர்வதற்கு 160 அடி அகலம், 58 அடி நீளத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினுடைய தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு 66 கேலரி அமைக்கப்பட்டு அதில் 55,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.  மாநாட்டு திடலில் 25 எல்இடி மற்றும் மாநாட்டு வெளி பகுதி மற்றும் ஐந்து பார்க்கிங் வசதி ஆகிய இடங்களில் 40 எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் நிறுத்துவதற்கு   மாநாட்டு திடல் அருகே மற்றும் கீழக்கொந்தை  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் ஐந்து பார்க்கிங் வசதிகள் போடப்பட்டுள்ளன.  மாநாட்டு திடலில் ஆம்புலன்ஸ் வசதிகளுடன் 10 மருத்துவர் குழு மற்றும்  பார்க்கிங் வசதி வெளிப்பகுதியில் 8  என மொத்தம் 18 மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மாநாட்டு முகப்பில் நிறுவப்பட்டுள்ள 101 அடி கொடி கம்பத்தில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய் கொடி ஏற்ற உள்ளார்.   மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஒரு கைப்பையில் ஒரு 300 ml வாட்டர் பாட்டில், மிக்சர், ஒரு பிஸ்கட் பாக்கெட் அடங்கிய தொகுப்பு பையும் கொடுப்பதற்கு தயார் செய்து வைத்துள்ளனர்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் 300 மீட்டர் தொலைவில் இந்த மாநாடு நடைபெறுவதனால் மாநாட்டிற்காக மாநாட்டு திடல், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்டம் முழுவதும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3 டி ஐ ஜி,  10 எஸ்பி க்கள், 50 டிஎஸ்பி க்கள் என மொத்தம் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டின் பாதுகாப்பை கருதி யாரும் இரண்டு சக்கர வாகனங்களில் வரக்கூடாது என்று தன்னுடைய தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். அதையும் பொருட்படுத்தாமல் செல்வதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி