தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் பா. ரஞ்சித். கடைசியாக இவர் தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தது பா. ரஞ்சித், வேட்டுவம் என்ற திரைப்படத்தை இயக்கப் போகிறார்.
இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியானது. ஆனால் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்த படத்தை கையில் எடுத்துள்ளார் பா. ரஞ்சித். அதன்படி இவர் இயக்க உள்ள வேட்டுவம் திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இணைந்து அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகப் போவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…