spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் ‘வேட்டுவம்’ஷூட்டிங் எப்போது?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பா.ரஞ்சித்  இயக்கவிருக்கும்  ‘வேட்டுவம்’ஷூட்டிங் எப்போது?இயக்குனர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் பா. ரஞ்சித். கடைசியாக இவர் தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தது பா. ரஞ்சித், வேட்டுவம் என்ற திரைப்படத்தை இயக்கப் போகிறார்.

இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியானது. ஆனால் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்த படத்தை கையில் எடுத்துள்ளார் பா. ரஞ்சித். அதன்படி இவர் இயக்க உள்ள வேட்டுவம் திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இணைந்து அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகப் போவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img