சென்னை விமான நிலையத்தில் 2.2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நைஜீரிய நாட்டில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் 2.2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்கால்களில் அணியும் ஷுக்களில் மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்த கென்யா நாட்டு இளம் பெண்ணை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இந்த இளம் பெண் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வந்ததால் சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்கள்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சென்னைக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் தனிப்படை அமைத்து நேற்று புதன்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் 2.2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்இந்த நிலையில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் அந்த விமானத்தில் கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது இளம்பெண் ஒருவர் நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சுற்றுலா பயணி விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டன. அந்தப் பெண் பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போழுது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று பெண் சுங்க அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்தனர்.

அந்த கென்யா இளம்பெண் அணிந்திருந்த ஷூக்கள் சற்று வித்தியாசமாக இருந்தது. இதை அடுத்து அந்த இளம் பெண்ணின் ஷுக்களை கழட்டிப் பார்த்து சோதித்தனர். அந்த ஷுக்களின் அடி பாகங்களில் ரகசிய அறை வைத்து அதற்குள் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி மேலும் 5 ஜோடி ஷுக்கள் அவருடைய பைக்குள் இருந்தது. அந்த ஷுக்களிலும் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் ஷுக்களில் இருந்த போதைப் பொருட்கள் முழுவதையும் பறிமுதல் செய்து அது எந்த வகையான போதைப்பொருள் என்பதை ஆய்வு செய்வதற்காக சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து வந்த தகவலில் அது மிகவும் சக்தி வாய்ந்த கோக்கையின் போதைப் பொருள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கென்யா நாட்டு இளம் பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப் பொருட்கள் 2.2 கிலோ கோக்கையின். அதன் சர்வதேச மதிப்பு ரூ.22 கோடி.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் கென்யா நாட்டு இளம் பெண்ணை நேற்று இரவு கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இளம் பெண் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது.

எனவே இவர் சென்னையில் யாரிடம் இந்த போதை பொருளை கொடுப்பதற்காக எடுத்து வந்தார்? சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார் இருக்கின்றனர்? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
இதனால் தான் தவெக விஜய் ஒரு தற்குறி
01:17
Video thumbnail
எல்லோருக்கும் வீடு, மோட்டார் சைக்கிள், வேலைவாய்ப்பு, கல்வி | இதனால் தான் தவெக விஜய் ஒரு தற்குறி |TVK
09:00
Video thumbnail
கரூரில் செய்த பிழை, இன்று வரை காரணம் சொல்லாத விஜய்? | Karur | TVK | Vijay
05:59
Video thumbnail
பெண்கள் பெயரில் பட்டா.. பெண்களுக்கு முன்னுரிமை.. - அமைச்சர் நாசர் பேச்சு
02:32
Video thumbnail
உணவுப் பற்றாக்குறையற்ற மாநிலம் என்ற அடையாளத்தை தமிழ்நாடு பெற்றிட வழிவகுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்
10:37
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:07
Video thumbnail
2026-ல் திமுகக்கு பிரகாசமான வாய்ப்பு.. 2வது இடத்துக்கு அதிமுக–தவெக போட்டி
01:14
Video thumbnail
பாஜக ஆர்.எஸ்.எஸ்-யில் ஐக்கியமான நாம் தமிழர் கட்சி
01:16
Video thumbnail
அதிமுகவுக்கு சரியாக கூட்டணி அமையவில்லை
01:00
Video thumbnail
திமுக கூட்டணிக்கு 50–55% வாக்குகள் -உளவுத்துறை கருத்துக்கணிப்பு
01:07
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img