பயணியின் நகையை டிரைவா் திருடிய சம்பவத்தால் – பரபரப்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தெலங்கானாவில் பஸ்சை ஓட்டி கொண்டே தனது அருகில் வைத்த பயணியின் பையை திறந்து தங்க நகையை திருடிய டிரைவர்

பயணியின் நகையை டிரைவா் திருடிய சம்பவத்தால் - பரபரப்பு

சக பயணி வீடியோ எடுத்ததால் கையும் களவுமாக பிடிப்பட்ட ஆர்.டி.சி. டிரைவர் தெலங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி ஆர்டிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண் பயணி ஒருவர் தனது பையை பாதுகாப்பாக இருக்கும் என டிரைவர் சீட்டிற்கு அருகில் வைத்தார். தனது அருகில் இருக்கும் பையில் அந்த பயணி தங்க நகை வைப்பதை பஸ்ஸை ஓட்டி கொண்டே கவனித்த டிரைவர் . சிறிது தூரம் சென்றதும் யாரும் கவனிக்கவில்லை என்று ஒரு கையில் பஸ் ஓட்டி கொண்டே தனது சீட்டின் அருகில் வைத்திருந்த பெண் பயணியின் பையை திறந்து அதில் வைத்திருந்த தங்க நகை பாக்சை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டார். ஆனால் சக பயணி ஒருவர் இந்த சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் பதிவு செய்தார்.

பயணியின் நகையை டிரைவா் திருடிய சம்பவத்தால் - பரபரப்புபயணியின் நகையை டிரைவா் திருடிய சம்பவத்தால் - பரபரப்பு

பின்னர் டிரைவரிடம் நகையை கேட்டபோது தன்னிடம் இல்லை என்றார். பின்னர் கீழே விழுந்து இருந்தது அதை எடுத்து வைத்து கொண்டதாக கூறினார். ஆனால் பையில் இருந்து எடுக்கும் வீடியோ இருப்பதாக கூறிய பின்னர் ஆம் தவறாக எடுத்து விட்டேன் மன்னிக்கும்படி கூறினார். அதற்குள் பயணிகள் அவசர போலீஸ் எண் 100 க்கு போன் செய்ததால் அங்கு வந்த போலீசார் அவரை விசாரித்து நகையை மீட்டு பயணியிடம் வழங்கினர். இதனால் கையும் களவுமாக டிரைவர் சிக்கி இருந்தாலும் பயணிக்கு நகை கிடைத்ததால் புகார் வேண்டாம் எனக்கூறினார். இருப்பினுன் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பயணியின் நகையை டிரைவா் திருடிய சம்பவத்தால் - பரபரப்பு

பயணிகளை பாதுகாப்பாக அவரவர் இருப்பிடத்திற்கு அழைத்து செல்லக்கூடிய டிரைவர் பயணிகளின் உயிர் மட்டுமல்லாமல் உடைமைகளுக்கும் பாதுகாவலராக இருப்பது வழக்கம். பஸ் பயணிகள் தவறி விட்டு செல்லும் பொருள்களை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்து மீண்டும் பயணிக்கு சேரும் விதமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இந்த பஸ் டிரைவரோ பயணியின் நகைகளை திருடி பிடிப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருமங்கலத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் – கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் கைது

 

Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
Video thumbnail
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் பங்கேற்கவில்லை
00:34
Video thumbnail
மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
00:43
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் அழைப்பு | மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
11:51
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி | EPS | ADMK | BJP | Modi | Amit Shah
07:24
Video thumbnail
உயர்கல்வி தரவரிசையில் தமிழ்நாடு நம்பர் 1
00:57
Video thumbnail
மாநில சுயாட்சி தீர்மானம் | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img