spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்…!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே அடுத்ததாக கார்த்தி இழந்த தனது வெற்றியை எப்படி மீட்டெடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்…!எனவே கார்த்தி ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக மெய்யழகன் திரைப்படம் வந்துள்ளது. கார்த்தியின் 27 வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். சூர்யாவின் 2D நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இதற்கு இசை அமைக்க மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிராமத்துக் கதைக்களத்தில் எமோஷனல் கலந்த குடும்பப் பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்…!இப்படமானது நாளை (செப்டம்பர் 27) திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கு முன்பே சினிமா விமர்சகர்களுக்கும், ஊடகத்தினர்களுக்கும் இந்த படத்தின் பிரத்தியேக காட்சி போட்டு காட்டப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தினை பார்த்த பலரும் சமூக வலைதள பக்கத்தில் படம் குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது, மெய்யழகன் படம் உணர்வுபூர்வமான படம் என்றும் பல உணர்வுபூர்வமான காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்…!மற்றொருவர், மெய்யழகன் திரைப்படம் நினைத்ததை விட அருமையாக வந்திருப்பதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் நம் வாழ்க்கையுடன் கனெக்ட் செய்யும் விதமாக அமைந்துள்ளதாகவும் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரும் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு படம் குறித்து தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img