spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கோயம்புத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேபோல், நாளை ராமநாதபுரம், சிவகங்கை ,புதுக்கோட்டை , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ,கடலூர், கள்ளக்குறிச்சி,அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

நாளை மறுநாள் புதுக்கோட்டை , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ,கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 16 மாவட்டங்களிலும், வரும் 5ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை , கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல், வரும் 6ஆம் தேதி சிவகங்கை , மதுரை, புதுக்கோட்டை , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை , கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.

Video thumbnail
ஜனநாயகன் லீக்.. உதயநிதி மீது பழி.. | Jana Nayagan | Vijay | Udhayanidhi Stalin
01:14
Video thumbnail
ஜனநாயகன் படம் லீக் செய்தது யார்? | Jana Nayagan | Leaked
01:17
Video thumbnail
ஜனநாயகன் படம் லீக் செய்தது யார்? உதயநிதி மீது பழி | Jana Nayagan Leaked | Vijay | TVK | DMK
10:48
Video thumbnail
விஜய் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
02:17
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பழனிசாமி பேசியது கண்டத்திற்குரியது; அநாகரீகம். - ஓபிஎஸ் விமர்சனம்
01:24
Video thumbnail
கேரளம் சட்டமன்றத் தேர்தல் : வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் நடிகர் மோகன்லால்!
01:01
Video thumbnail
கேரளம் சட்டமன்றத்தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய நடிகர் மம்முட்டி
01:01
Video thumbnail
கண்ணூரில் கேரளம் முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்
00:54
Video thumbnail
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க RX100 பைக்கில் வந்த முதலமைச்சர் ரங்கசாமி
00:52
Video thumbnail
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் தான் உள்ளது.. - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை | TVK Vijay
19:37
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img