spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கவரைப்பேட்டை விபத்து குறித்து ரயில்வே உயர்மட்ட குழு நேரில் சென்று ஆய்வு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கவரைப்பேட்டை விபத்து குறித்து ரயில்வே உயர்மட்ட குழு நேரில் சென்று ஆய்வு.திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தென்னக ரயில்வேயின் உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு சரக்கு ரயிலின் மீது பாகமதி விரைவு ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இரு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டன. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் தடம் புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளில் 300-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகா சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் இடை இடையே நிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.

‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வரும் – அப்டேட் செய்த அனிருத்!

இந்த நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தென்னக ரயில்வேயின் உயர்மட்ட குழுவினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கு சிக்னல் கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் காரணமா? என உயர்மட்டக்குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் மெமு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூளூர்பேட்டை – நெல்லூர் மெமு ரயில், விஜயவாடா – சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img