spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மதுபோதையில் பெண் காவலர் மீது மோதி விபத்து.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மதுபோதையில் பெண் காவலர் மீது மோதி விபத்து.பெண் காவலர் மீது மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய கார் ஷோரூம் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் லோகேஸ்வரி (23) என்பவர் அரும்பாக்கம் 100 அடி சாலையில் தேநீர் அருந்துவதற்காக இன்று காலை சென்றிருக்கிறார். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று பெண் காவலர் லோகேஸ்வரி மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெண் காவலர் லோகேஸ்வரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு வலது கால் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

மேலும், அவர் அடையாரில் செயல்பட்டு வரும் மாருதி சுசுகி கார் ஷோரூம் மேலாளர் நந்தகுமார் (29) என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நந்தகுமாரை கைது செய்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சாலையில், நடந்து சென்ற, பெண் காவலர், மீது, மதுபோதை, மோதிய ஆசாமி.

 

Video thumbnail
'வித் லவ்' படத்தின் Pre Release-க்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
00:28
Video thumbnail
"திமுகவை வீழ்த்த TVK-வால் மட்டும்தான் முடியும்" - தவெக தலைவர் விஜய்
01:06
Video thumbnail
"அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு" - விஜய் பேச்சு
00:55
Video thumbnail
டப்பா என்ஜின் உள்ளிட்ட எந்த என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் தவெக தான்
01:03
Video thumbnail
தமிழ்நாடு விழிப்புணர்வு பெற காரணம் திமுக தான்
01:02
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன?
01:13
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன? | தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு சமூக நீதி தான் காரணம்
12:19
Video thumbnail
"நாங்க பாஜவுக்கு அடிமையா.. திமுக அலுவலகம் தான் டெல்லியில் இருக்கு"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
01:19
Video thumbnail
"எடப்பாடி ஆட்சியில் 13 பேரை குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றார்கள்" -செங்கோட்டையன்
01:28
Video thumbnail
ரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பு மோசடிரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பு மோசடி
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img