spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயிலின் சேவை மீண்டும் தொடக்கம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கனமழையால் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கப்பட்டதை அடுத்து 2 நாட்களுக்கு பின்னர் மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு கனமழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த அக்டோபர் 16, 17ஆம் தேதிகளில் மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், கனமழையால் மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவுகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததாலும், மழையின் தீவிரம் குறைந்ததாலும் மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைரயில் சேவை 2 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இன்று தொடங்கும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, மேட்டுப்பாளையம் – உதகை மற்றும் உதகை – மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட மலை ரயிலில், ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.

 

Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை | சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக MLA க்கள், விஜய்யை சந்தித்தனர்
13:29
Video thumbnail
விஜய் முதல்வரானது குறித்த கேள்வி.. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!
00:23
Video thumbnail
சென்னையில் எத்தியாட் விமானத்தில் திடீர் கோளாறு.. அவசர நிறுத்தம்
00:27
Video thumbnail
விஜய்க்கு பாராட்டுகள்.. - சட்டப்பேரவையில் பிரேமலதா பேச்சு..
00:51
Video thumbnail
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை அஞ்சலி சாமி தரிசனம்
00:59
Video thumbnail
அரசியல் நாகரீகம் | முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய் | CM Vijay
13:03
Video thumbnail
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்..
00:53
Video thumbnail
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல்
00:18
Video thumbnail
எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி
00:48
Video thumbnail
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று கொண்டார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
00:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img