சூளைமேட்டில் இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து 8 வாகனங்களில் வந்து போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சூளைமேட்டில்  இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து 8 வாகனங்களில் வந்து போராடி தீயை  அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
சென்னை சூளைமேட்டில் நேற்றிரவு பழைய இரும்பு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சென்னை சூளைமேடு பத்மநாபன் நகர் பிரதான சாலையில் துரை என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடை மற்றும் குடோன் செயல்பட்டு வருகிறது. 2 தளங்கள் கொண்ட இந்த குடோனில் நேற்றிரவு 9 மணியளவில் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென 2வது தளத்திற்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் பல அடி உயரத்திற்கு கரும் புகை எழுந்தது.இதனை அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்கடங்காமல் கொளுந்துவிட்டு எரிந்தது. இதனை அடுத்து, அண்ணா நகர், மதுரவாயில், எழும்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் 8 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதனிடையே, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் தீ பரவும் அபாயம் இருந்ததால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. தீ விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா?
01:06
Video thumbnail
சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கம் அருகே சென்று கொண்டிருந்த வேனில் தீ விபத்து
00:27
Video thumbnail
முதல்வரின் சமூக நீதி விடுதிகள் ; விசிக எம்.பி.ரவிக்குமார் வரவேற்பு
01:11
Video thumbnail
முதல்வரின் சமூக நீதி விடுதிகள் | பாராட்டிய வைரமுத்து
00:35
Video thumbnail
நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மகேந்திர சிங் தோனி
00:40
Video thumbnail
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
01:02
Video thumbnail
2026 தேர்தல் - அதிமுக தவெக பாமக | அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? | DMK | TVK | ADMK | PMK | BJP
11:33
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள்..
00:58
Video thumbnail
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
01:01
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள் | பா ரஞ்சித் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:36
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img