த.வெ.க மாநாடு; 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மாவட்டம் முழுவதும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3 டிஐஜி, 10 எஸ்.பி க்கள், 50 டி.எஸ்.பி க்கள் என மொத்தம் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

த.வெ.க மாநாடு;  4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.  விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. மாநாட்டு திடலில் அக்கட்சியின்  தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமர்வதற்கு 160 அடி அகலம், 58 அடி நீளத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினுடைய தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு 66 கேலரி அமைக்கப்பட்டு அதில் 55,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.  மாநாட்டு திடலில் 25 எல்இடி மற்றும் மாநாட்டு வெளி பகுதி மற்றும் ஐந்து பார்க்கிங் வசதி ஆகிய இடங்களில் 40 எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் : சிறைக்கைதி தப்பி ஓட்டம் – பேலீசாா் தேடி வருகின்றனா்.

வாகனங்கள் நிறுத்துவதற்கு   மாநாட்டு திடல் அருகே மற்றும் கீழக்கொந்தை  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் ஐந்து பார்க்கிங் வசதிகள் போடப்பட்டுள்ளன.  மாநாட்டு திடலில் ஆம்புலன்ஸ் வசதிகளுடன் 10 மருத்துவர் குழு மற்றும்  பார்க்கிங் வசதி வெளிப்பகுதியில் 8  என மொத்தம் 18 மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மாநாட்டு முகப்பில் நிறுவப்பட்டுள்ள 101 அடி கொடி கம்பத்தில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய் கொடி ஏற்ற உள்ளார்.   மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஒரு கைப்பையில் ஒரு 300 ml வாட்டர் பாட்டில், மிக்சர், ஒரு பிஸ்கட் பாக்கெட் அடங்கிய தொகுப்பு பையும் கொடுப்பதற்கு தயார் செய்து வைத்துள்ளனர்.த.வெ.க மாநாடு;  4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் 300 மீட்டர் தொலைவில் இந்த மாநாடு நடைபெறுவதனால் மாநாட்டிற்காக மாநாட்டு திடல், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்டம் முழுவதும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3 டி ஐ ஜி,  10 எஸ்பி க்கள், 50 டிஎஸ்பி க்கள் என மொத்தம் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டின் பாதுகாப்பை கருதி யாரும் இரண்டு சக்கர வாகனங்களில் வரக்கூடாது என்று தன்னுடைய தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். அதையும் பொருட்படுத்தாமல் செல்வதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் | BJP | ADMK | EPS | Modi
16:52
Video thumbnail
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
00:45
Video thumbnail
இந்தியாவில் ஏழைகளுக்கு முதன்முதலில் கல்வி அளித்தது கிறிஸ்தவ மிஷனரி
01:30
Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img