spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

 ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து - பயணிகள் கடும் அவதி

இந்த நிலையில் இன்றும் ஒரே நாளில், புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் 6 வருகை விமானங்கள், மொத்தம் 12 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இவைகள் அனைத்துமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு இன்று காலை 7.45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், காலை 8.25 மணிக்கு கொல்கத்தா விமானம், காலை 9.40 மணி பெங்களூரு விமானம், காலை 10.10 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 12.35 மணி சிலிகுரி விமானம், இரவு 10.45 மணி கொல்கத்தா விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதை போல் சென்னைக்கு வர வேண்டிய காலை 9 மணி பெங்களூரு விமானம், பகல் 12 மணி புவனேஸ்வர் விமானம், பகல் 1.40 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 1.45 மணி கொல்கத்தா விமானம், மாலை 6.40 மணி சிலிகுரி  விமானம், இரவு 10.05 மணி கொல்கத்தா விமானம் ஆகிய 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அரசு பள்ளி விடுதி காப்பாளர் பணியிடங்கள் – அரசின் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் 12 விமானங்கள், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில்  பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

Video thumbnail
நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவருடன் சேர்த்த மனைவி
00:58
Video thumbnail
"தவெகவிற்கு ஆதரவளித்த கட்சிகள் மீது முதலமைச்சர் விஜய்-க்கு நம்பிக்கை இல்லையா?"
01:46
Video thumbnail
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியில் இணையும் மாற்றுக் கட்சியினர்
02:40
Video thumbnail
தவெகவின் ஒருமாத கால ஆட்சி குறித்து வைகோ சொன்ன கருத்து
01:18
Video thumbnail
தமிழக அரசின் பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும்... நிதி அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..
01:30
Video thumbnail
தவெகவில் இணைவதற்கு பனையூர் தவெக அலுவலகம் வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி
01:09
Video thumbnail
சென்னையில் இருந்து கோவை சென்ற அண்ணாமலைக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு..
00:57
Video thumbnail
சசிகுமார் அவரது படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன், பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
00:38
Video thumbnail
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
00:50
Video thumbnail
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூரு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img