ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ம.தி.மு.க.வைச் சேர்ந்த ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

“செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்”- கண்ணீர் மல்க ஆவேசமாக பேசிய துரை வைகோ!

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிக்கு ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, திருச்சி தொகுதியில் துரை வைகோ தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சூழலில், ம.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், ஈரோடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.பி. கணேசமூர்த்தி கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன.

வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன்!

கடந்த ஒருவாரமாக மனஅழுத்தத்தில் எம்.பி. கணேசமூர்த்தி இருந்ததாகவும், தனது மீண்டும் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், இத்தகைய முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் ம.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img