ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வேலூர் மத்திய சிறையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைகள் செய்வதற்காக, சிறையில் இருந்து சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் ஆகியோர் சிவகுமாரை சிறையில் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதன் பேரில் சிபிசிஐடி போலீசார், வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

விசாரணையில் கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதியானதால், அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே வேலூர் சரக டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், சிறை கண்காணிப்பாள அப்துல்ரகுமான் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, வேலூர் சரக முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெவித்துள்ளனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img