சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்று வந்திருக்கிறார். இன்று காலை சக மாணவர்கள் 6 பேருடன் மெரினாவில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி கவியரசன் மாயமாகியுள்ளார்.
குளித்துக் கொண்டிருந்த சக நண்பர்கள் அங்கும் இங்கும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரையடுத்து கடலோர காவல் படையினரின் உதவியோடு மாயமான கவியரசனை தேடிய நிலையில் கவியரசின் சடலம் கரை ஒதுங்கியது. மெரினா போலீசார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.