அண்ணாநகர்: டவர் பூங்காவில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் – தீயணைப்பு துறையினர் மீட்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அண்ணாநகர் டவர் பார்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் ஆணையர் உடனடியாக இங்கு வரவேண்டும் என காவலர் கூச்சலிட்டதால் சுமார் இரண்டரை மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

அண்ணாநகர்: டவர் பூங்காவில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் - தீயணைப்பு துறையினர் மீட்பு.

சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் திடீரென காக்கி சட்டை அணிந்த காவலர் ஒருவர் டவரின் உச்சிமீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அந்த காவலர் காவல் ஆணையர் எனது கோரிக்கையை கேட்க இங்கு உடனடியாக வரவேண்டும் எனவும் என்னை மீட்கும் பணியில் ஈடுபட்டால் மேலிருந்து குதித்து விடுவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர் சுமார் இரண்டரை மணி நேரமாக அந்த காவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கி வந்தனர்.

திருக்கோவிலூர் : தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

இதனையடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த அந்த காவலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் பரீக் பாட்ஷா(25) என்பதும்  மெட்ரோ ஸ்டேஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என போலீசார் விசாரணை நடத்திய போது அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்தார். பல மணி நேரமாக அந்த காவலர் வாயை திறக்காததால் போலீசார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். காவலர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் பணிச்சுமையா அல்லது வேறு ஏதாவது காரணமா? என அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
Video thumbnail
பாஜகவுக்கு, திமுக மீது ஏன் அவ்வளவு வன்மம்
00:54
Video thumbnail
2026 தேர்தலில் புதிய கூட்டணி | விஜய் - சீமான் - அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு?
00:46
Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
Video thumbnail
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் பங்கேற்கவில்லை
00:34
Video thumbnail
மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
00:43
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img