கோவையில் தனக்கு “சூப்பர் பவர்” இருப்பதாக எண்ணி நான்காவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் பிரபு (19). இவர் கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனக்கு “சூப்பர் பவர்” இருப்பதாக தனது நண்பர்கள் மற்றும் விடுதியில் தங்கியிருக்கும் சக மாணவர்களிடம் கூறிவந்துள்ளார்.
சூப்பர் ஹீரோ மற்றும் அசாத்திய நிகழ்வுகளின் வீடியோக்களை பிரபு தனது செல்போனில் பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கோவை மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரி விடுதியில் இருந்த பிரபு நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென நான்காவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து சாகசம் செய்துள்ளார். இதில் கீழே விழுந்த பிரபு படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்த மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திபாவளி கொண்டாட்டம் – அமைச்சா் ராஜேந்திரன்.