யூடியூபில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர்களின் இர்ஃபானும் ஒருவர். இவருக்கு சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமாக இருந்தாலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்தியாவில் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிவது சட்டவிரோதமான செயலாக இருந்தாலும் துபாயில் இந்த செயல் வழக்கத்தில் உள்ளது. எனவே அவர் துபாய் சென்று இருந்த சமயத்தில் அந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
ஆனால் அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இர்ஃபான் அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கினார். மேலும் இது போன்ற தவறை இனி செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்து இருந்தார். ஆனால் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்ஃபான். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரது மனைவி ஆசிபாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்து மூன்று மாதங்களைக் கடந்த நிலையில் சமீபத்தில் மருத்துவமனையில் குழந்தை பிறந்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்படி மருத்துவமனையில் பிரசவ அறைக்குள் சென்று குழந்தை பிறந்த உடனே தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் மருத்துவரே கத்திரிக்கோலை எடுத்துக் கொடுக்கிறார். இந்த வீடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் பல்வேறு இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பத்து நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணித்துறை இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறு தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அந்த சர்ச்சைகளை ஓரமாக வைத்துவிட்டு இர்ஃபான் தனது குழந்தைக்கு பெயர் சூட்டிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி இர்ஃபான் தனது மகளுக்கு ஐஃபா என்று பெயர் சூட்டியுள்ளார். ஐஃபா என்றால் RICHNESS என்ற பொருள்படும். எனவே இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இர்ஃபானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…