மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் எந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீஸர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.
அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த பாடல்களையும் படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அப்போது ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவை, நிகழ்ச்சி தொகுப்பாளர் சூப்பர் ஸ்டார் என்று அடிக்கடி அழைத்துள்ளார். அதற்கு சூர்யா, “எங்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் சார் மட்டுமே சூப்பர் ஸ்டார். எங்களால் அந்த பட்டத்தை கடன் வாங்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…