க்ரைம்

கடலூர் அருகே வியாபாரம் செய்யலாம் என கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி

கடலூர் அருகே லூளு மால் உரிமையாளரிடம் வியாபாரம் செய்யலாம் என்று கூறி மூன்று கோடி ரூபாய் ஏமாற்றியதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீத் இவர் 30 ஆண்டுகாலமாக அபுதாபியில் பணிபுரிந்து ஊர் திரும்பிய நிலையில் இவருக்கு கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தை சேர்ந்த முகமது சுகைல் என்பவர் பழக்கமானார்.

முகமது சுகைல் தான் பெரிய அளவில் வியாபாரம் செய்து வருவதாகவும் அதில் நீங்களும் இணைந்து கொண்டால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். தமிழக முதல்வரின் குடும்பத்தை தனக்கு தெரியும் எனவும் அதன் மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான முந்திரி திராட்சை உள்ளிட்ட பருப்பு வகைகள் தான் இந்த முறை வழங்க உள்ளதாகவும் நீங்களும் அதில் சேர்ந்து கொண்டால் உங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய அப்துல் அஜீத் அவருக்கு ரூ 1.7 கோடி பணம் நேரடியாகவும், மீதி பணத்தை வங்கி கணக்கு மூலமாக கொடுத்துள்ளார்.  இதில் 40 சதவீதம் தனக்கு லாபத்தில் தருவதாக அவர் கூறியுள்ள நிலையில் லூலூ மால் உரிமையாளர் தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் அவர் டெல்லிக்கு வருகிறார் அவருடைய லுலுமாலுக்கு நாம் இங்கு இருந்து பயறு வகைகளை சப்ளை செய்தால் மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என மேலும் ஆசை காட்டி உள்ளார்.

 

ஆசை வார்தையயை நம்பிய அப்துல் அஜீத் அவருடன் டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லிக்குச் சென்ற அப்துல் அஜீத்தை BMW காரில் வைத்து டெல்லியில் சுற்றியதுடன் அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் இவர்தான் லூலுமால் உரிமையாளரின் பி.ஏ (P.A)  என ஒரு நபரை காட்டி உள்ளார். மேலும் துபாய் அதிபரின் பி.ஏ(P.A) என்று இன்னொருவரையும் காட்டியதுடன் அவரிடம் இன்று நாள் நன்றாக உள்ளது ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள் எனக்கூறி சில பேப்பர்களில் கையெழுத்தும் வாங்கி உள்ளார்கள்.

அதன் பிறகு முகமது சுஹைல் தன்னுடைய வங்கி கணக்கில் 277 கோடியே 33 லட்சம் ரூபாய் உள்ளதாக காட்டி இருக்கின்றார்.  தான் தமிழகம் வந்த பிறகு தன்னுடைய வங்கிக் கணக்கினை வருமானவரித்துறையினர் முடக்கி விட்டதாகவும் அதனை மீட்பதற்கு இன்னும் ஒன்றரை கோடி ரூபாய் தேவைப்படுகிறது அதனை கொடுத்தால் வங்கி கணக்கு மீண்டும் வந்த பிறகு உனக்கு 10 கோடி ரூபாய் தருகிறேன் என கூறியதை நம்பி அப்துல் அஜீது தன் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் கடன் வாங்கி ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை முகமது சுகைலின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

பிறகு  அவரிடம் போன் செய்து பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததுடன் இரண்டரை கோடி ரூபாய்க்கும், ஒரு கோடி ரூபாய்க்கும் வங்கி காசோலையை கொடுத்துள்ளார். வங்கியில் சென்று விசாரித்த போது பணம் ஏதும் முகமது சுகைல் கணக்கில் இல்லை எனவும் அவர் ஸ்டாப் பேமென்ட் கொடுத்துள்ளதாகவும் வங்கி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இவர் போன் செய்து கேட்கும் போதெல்லாம் உன்னை ஒழித்து விடுவேன் குடும்பத்துடன் காலி செய்து விடுவேன் என முகமது சுஹைல் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்துல் அஜீஸ் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவினை ஏற்றுக் கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடலூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து தற்பொழுது கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது சுஐலை தேடி வருகின்றனர்.

மேலும் முகமது சுஹைல் இதேபோல 60 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு வணிகர்களையும் ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் தற்பொழுது 2 கோடி 83 லட்சம் அளவிற்கு தான் ஏமார்ந்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் வைத்துள்ள நிலையில் அதனை மீட்டு தர வேண்டும் என கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அனுகியுள்ளார்.

அப்துல் அஜீஸ் இதே போல் கடலூரில் மட்டுமே மூன்று- நான்கு பேரை ஏமாற்றியுள்ளதாகவும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும்  பலரை அவர் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது  நடவடிக்கை எடுப்பதற்காக அவரை தேடி வருகின்றனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி