அம்பத்தூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர், நண்பருடன் கைது. 1140 போதை மாத்திரைகள், ரூ . 20000 பணம், ஆட்டோ, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பெயரில், அம்பத்தூர் சரக உதவி ஆணையர் கிரி மேற்பார்வையில், அம்பத்தூர் சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர் டெல்லி பாபு தலைமையில் போலீசார் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்பத்தூர் மார்க்கெட் அருகே போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரியும் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (23) என்ற வாலிபர் அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் தனது ஆட்டோவில் வைத்து போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் அவருடைய நண்பனான சத்யா நகரை சேர்ந்த ரஞ்சித் (23) என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்பு இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து நைட்ரோ விட் என்றழைக்கக்கூடிய போதை மாத்திரைகளை வாங்கி வந்து அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் வட மாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 76 ஆயிரம் மதிப்புள்ள 76 அட்டைகளில் இருந்த 1140 போதை மாத்திரைகளையும், ரூ.20,000 ரொக்க பணம், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போதை பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளி இருவரையும் அம்பத்தூர் காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…