க்ரைம்

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி

ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் டிரேடிங்கில், கமிஷன் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையில் 1.36 கோடி ரூபாயை இழந்த ஐ.டி.ஊழியர்.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (41) ஐ.டி., ஊழியர். இவர், முகநூலில் டிரேடிங் எப்படி செய்வது என்பது தொடர்பாக வந்த விளம்பரத்தை பார்த்து லைக் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 11 ஆம் தேதி, இரு மொபைல் எண்ணில் இருந்து, ஜோஷிதா, வர்ஷினி என்ற பெயர் கொண்ட நபரிடம் இருந்து, அவரது வாட்சப் எண்ணிற்கு ஆன்லைன் டிரேடிங் குறித்து லிங்க் ஒன்று வந்துள்ளது.

கார்த்திக் அந்த லிங்கை திறந்து, டிரேடிங் தொடர்பான விவரங்களை பார்த்த பின், தனது வங்கி கணக்கு வாயிலாக லாகின் செய்ய அனுமதி பெற்று லாகின் செய்துள்ளார்.

தொடர்ந்து, 4 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, அதிலிருந்து 36,000 கமிஷன் தொகையை திரும்ப எடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, 10 சதவீதம் கமிஷன் போக, 300 சதவீதம் லாபம் கிடைக்கும் ‘இன்ட்ரா டே ; பிளாக் டிரேட் மற்றும் ஐ.பி.ஓ., ஆகிய டிரேடிங்கில் இணைய விரும்புவதாக, மர்ம நபர்கள் வாட்ஸ்அப் குழுவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கமிஷன் தொகையான 27 லட்சம் ரூபாயை செலுத்தாவிட்டால், வங்கி கணக்கு முடங்கிவிடும் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர். அதன்படி, 27.96 லட்சம் ரூபாய், வங்கி கணக்கு மூலம் செலுத்தியுள்ளார்.

மேலும், மர்ம நபர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் 1.36 கோடி ரூபாயை செலுத்தி பணத்தை இழந்துள்ளார்.

இது குறித்து விசாரித்த மத்திய சைபர் கிரைம் போலீசார், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரமேஷ்குமார் (38) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்(30) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்கை பயன்படுத்தி தேவையில்லாமல் பணத்தை இழக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க ஆவடி காவல் ஆணையர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsdesk

Share
Published by
Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி