க்ரைம்

உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பல் கைது

டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.கேரளாவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad)  சேர்ந்தவர் சபித் நாசர் (30).  சபித் நாசர் ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தியவர்களின் உறுப்புகளை பெறுவதற்காக, டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“இந்த மோசடியின் ஒரு பகுதியாக எத்தனை பேர் ஏமாற்றப்பட்டனர் என்பதை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அவர் ஹைதராபாத்தில் இருந்து ஈரானுக்கு இரண்டு நபர்களை அனுப்பி உள்ளதாகவும்,  அவர்களின் சிறுநீரகங்களை பெற்றதாகவும் தெரியவருகிறது.

சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆட்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. ஐதராபாத், பெங்களுரு ஆகிய பகுதிகளில் இருந்து பொருளாதார்தில் பின் தங்கியவர்களை கிட்னி தானம் என்று கூறி ஈரான் நாட்டுக்கு அனுப்பப்பட்டது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது.இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட நபர்கள் ஈரான் நாட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்னி எடுக்கப்படுகிறது. அதன் பின் எடுக்கப்பட்ட கிட்னி பொருந்தும் உரிய நபரை தேர்ந்தெடுத்து அவருக்கு கிட்னி பொருத்தப்படுகிறது.

ஒரு கிட்னி ரூ.6 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. கிட்னி எடுத்த பிறகு இருபது நாட்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கு  அனுப்பி வைப்பதாகவும் விசாரனையில் தெரியவந்துள்ளது.

சபித் டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2019 முதல் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். முதன் முதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபேஸ்புக்  நன்பர் ஒருவர் உதவியுடன் ஜூலை 2019 -ல் இலங்கைக்கு சென்று ரூ 5 லட்சத்திற்கு தனது சொந்த சிறுநீரகத்தை தானம் செய்யதுள்ளார் என்பதும் விசாரனையில் தெரியவந்துள்ளது.தற்போது அவர் தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக கேரளா வந்துள்ளார். அவரை புலனாய்வுப் பணியகத்தின் கண்காணிப்பின் உதவியுடன் , கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் குடியேற்ற அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யபட்டுள்ளார்.

திங்கட்கிழமை (மே 20), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீஸார் அவரை செவ்வாய்க்கிழமை (மே 21) காவலில் எடுத்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி