தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.
இதன் பிறகு தனுஷ் சினிமாவில் படு பிஸியாக நடித்து வர ஐஸ்வர்யாவும் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரது வாழ்விலும் பூகம்பம் கிளம்பியது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் தங்களின் திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் இருவரின் வீட்டாரும் இவர்களை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளனர். ஆனால் எதுவும் பலனளிக்காமல் போக கடைசியில் பரஸ்பர விவாகரத்து கோரி தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 7ஆம் தேதியில் இருவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி இவர்களின் விவாகரத்து மனு 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் இந்த வழக்கு இன்று (அக்டோபர் 19) ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்றும் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே மீண்டும் இந்த வழக்கு வருகின்ற நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…