செய்திகள்

‘ப்ளடி பெக்கர்’ படத்திற்கு கவின் வேண்டாம் என்று இயக்குனரிடம் சொன்ன நெல்சன்!

கவின் நடிப்பில் கடைசியாக ஸ்டார் திரைப்படம் வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து கவின் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், ப்ளடி பெக்கர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரிக்க நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இயக்கியிருக்கிறார். ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது.

அதன்படி இந்த படத்தின் டீசர் ட்ரெய்லரும் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 18) சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய நெல்சன், இயக்குனர் சிவபாலனிடம் இந்த படத்திற்கு கவின் வேண்டாம் என்று சொல்லியதாக கூறியுள்ளார். அதாவது, “இருவருக்குமே கவின் நண்பனாக இருந்தாலும் அவனை தனிப்பட்ட முறையில் பார்த்துக் கொள்ளலாம். ஒரே வண்டியில் ட்ரிப்பிள்ஸ் போற மாதிரி கொலாப்ஸ் பண்ணிட வேண்டாம். கவின் வேண்டவே வேண்டாம் என்று சிவபாலனிடம் சொன்னேன்.ஏனென்றால் பெக்கர் கதாபாத்திரம் கவினுக்கு செட்டாகுமா? இந்த கதை செட்டாகுமா? என யோசித்தேன்.

ஆனால் சிவபாலன், கவின் தான் சரியான சாய்ஸ் என்று சொன்னார். அதன் பிறகு படத்தை எடுத்த பிறகு முழு படத்தையும் பார்த்தோம். அதில் நடிகர் கவின் சிறப்பாக நடித்திருந்தார். அதன் பிறகு தான் கவின் நடிக்க வேண்டாம் என்று சொன்னது தவறு என்பதை புரிந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் போன்ற நண்பர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பேசியுள்ளார் நெல்சன். அடுத்தது, “ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தான் நான் ப்ளடி பெக்கர் படத்தை தயாரித்துள்ளேன். ஜெயிலர் படம் சராசரியான வெற்றியைப் பெற்றிருந்தால் என்னால் இந்த படத்தை தயாரித்திருக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

 

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி