செய்திகள்

தி.மு.க நலதிட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் – அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதம்.

நமது தமிழக முதல்வர் சொல்வதையும் சொல்லாததையும் செய்து வருபவா்.  நமது  முதல்வரின் நலத்திட்டங்களை பட்டியல் இடும்  பொழுது  திருபுகழை பாட பாட வாய் மணக்கும் என்பாா்கள் அதுபோலவே நமது முதல்வரின் மக்களின் நலன் கருதி செயல் படுத்தும் நலதிட்டங்களை செல்ல சொல்ல வாய் மணக்கும். என்று அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதத்தோடு பேசியுள்ளாா்.

ஆவடி மாநகராட்சியில் வீட்டு வசதி வாரியத்தின்  குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து  ரூபாய் 14 லட்சம்    செலவில்  நியாய விலை கடை ஒன்றை  சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  திறந்து வைத்ததோடு மக்களுக்கு எடை போட்டு பொருட்களையும்  வினியோகம் செய்தாா். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர், திருபுகழை பாட பாட வாய் மணக்கும் என்பது போல் ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் அந்த அளவிற்கு தமிழக முதல்வர் சொன்னதையும் சொல்லாததையும் செய்து வருகின்றாா். ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையை 3 ரூபாயை குறைத்ததால்  நாள் ஒன்றுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டிருந்தாலும் மக்களின் நலனை மனதில் வைத்து   விலையை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. மகளிர் தங்களது பயணத்தை மேற்கொள்ள கடந்த மாதம் வரை 520 கோடி முறை இலவச பயணத்தில் பயணம் செய்துள்ளனர்.

அதனால் 660 கோடி ரூபாய் வரை அரசுக்கு சுமை ஏற்பட்டாலும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் தமிழ்நாட்டின் முதல்வர் தான் என பெருமிதத்துடன் தெரிவித்தார். அதனைத் தொடரந்து, மாணவா்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கும் காலை உணவுத்திட்டத்தையும் , கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய புதுமை பெண் திட்டத்தையும், மகளீர் உரிமைத் திட்டம்  என்று எண்ணற்ற திட்டங்களையும்  நடைமுறை படுத்தி செய்து வருகின்றவா்  நமது முதல்வா்  என்று அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதத்தோடு பேசியுள்ளாா்.

 

 

 

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி