செய்திகள்

சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திபாவளி கொண்டாட்டம் – அமைச்சா் ராஜேந்திரன்.

சேலத்தில்  மன நலம் குன்றிய மாற்று திறனாளி குழந்தைகளுடன் தீப ஒளி திருநாளை கொண்டாடிய தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் தொடர்ந்து கல்வியிலும், விளையாட்டு துறைகலிலும் தமிழக மாணவ மாணவியர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் பெருமிதத்தோடு பேசினாா்.

 

 

சேலம் மாநகரின் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பாலர் ஞான இல்லத்தில் மனம் நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் பயின்று வருகின்றாா்கள். இந்த இல்லத்திற்கு இன்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் , மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தீப ஒளி திருநாளையொட்டி இனிப்புகளை வழங்கியுள்ளாா் . மேலும் மாற்று திறனாளி நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் உற்பத்தி செய்த பொருட்களை பார்வையிட்டு, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளையும் வழங்கி , மத்தாப்பை கொளுத்தி அவர்களுடன் இணைந்து தீப ஒளி திருநாளை கொண்டாடினார். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மத்தாப்பை சுழற்றி மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

இதனிடையே, சேலம் அருகே பனமரத்துபட்டி ஒன்றிய மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் 182 பேருக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த அவர், இந்தியாவிலேயே கல்விக்கும், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக மாணவ மாணவியர் கல்வியில் நாட்டிலேயே சிறந்தவர்களாக வர வேண்டும் என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி