ஆவடியில் 3000 பேருக்கு இலவசப் பட்டா; துணை முதலமைச்சர் உதயநிதி வழங்குகிறார்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடியில் 3000 பேருக்கு இலவசப் பட்டா; துணை முதலமைச்சர் உதயநிதி வழங்குகிறார்.ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் 3000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (09-10-2024) காலை 10 மணிக்கு ஆவடி இந்து கல்லூரியில் நடைபெறுகின்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அமைச்சரவையில் மீண்டும் இடம்பிடித்துள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெறுகின்ற முதல் நிகழ்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாவிற்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருந்த மக்களுக்கு, அவர்களின் விண்ணப்பத்தை வருவாய் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து இந்த பட்டா வழங்கப்படுகிறது.

ஆவடி, பூவிருந்தவல்லி, திருவள்ளூர், கும்முடிப்பூண்டி , பொன்னேரி ஆகிய வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் சுமார் 3000 பயனாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டாவை துணை முதலமைச்சர் வழங்குகிறார்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img