சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.56,960க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் சவரன் ரூ.56,800க்கு விற்பனையான நிலையில், நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.56,880க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு மேலும் 80 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ரூ.56,960க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து கிராம் ரூ.7,120க்கு விற்பனையாகிறது.
இதேபோல், சில்லறை வர்த்தத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து புதிய உச்சமாக கிராம் 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து 1 லட்சத்து, 3 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால்,பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.