கனமழை எதிரொலி-புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு தொடங்கி 3வது நாளாக மழை நீடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம் 30 செ.மீ., செங்குன்றம் 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது பெய்துவரும் கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

புழல் ஏரிக்கு நேற்று 277 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3,471 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,326 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 16.57 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

‘சூர்யா 45’ படத்தின் கதாநாயகி இவர்தானா டைட்டில் என்ன?

இதேபோல 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 162 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 160 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1099 கன அடியாக அதிகரித்துள்ளது. 18.86 அடி உயரத்தில் தற்போது 3.98 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது.

கனமழை எதிரொலி-புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

இதே போல 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 305 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு 60 கனஅடியாக இருந்த நீர்வரத்து 50 கனஅடியாக சரிந்துள்ளது. 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்மட்டம் 30.35 அடி உயரத்தில் உள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர்இருப்பு உயர தொடங்கியுள்ளது.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img