spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மக்களவை தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 18வது மக்களவை தேர்தலை நடத்தி வருகிறது. மொத்த ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்து இருந்தது. அதாவது, ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 26ம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத், கா்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
120 பெண்கள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img