ஆந்திராவில் கல்லூரி மாணவி தற்கொலை – பேராசிரியர் உள்ளிட்ட 5 பேர் கைது
ஆந்திராவில் பாலியல் தொல்லை காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வேதியியல் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் நடவரம் மண்டலத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகள் ரூபாஸ்ரீ( 17 ), இளைய மகள் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ரூபா ஸ்ரீ விசாகப்பட்டினம் மாவட்டம் கொம்மாடியில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி பொறியியல் டிப்ளமோ (சிஎம்இ) முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரியில் பாலியியல் தொல்லை காரணமாக கடந்த வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் பலனில்லாமல் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக கல்லூரி நிர்வாகத்தினர் ரூபா ஸ்ரீ காலை முதல் கல்லூரி விடுதியில் இல்லை என இரவு 10 மணிக்கு போன் செய்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின்படி ரூபாஸ்ரீ காணாமல் போன வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே மாணவி கல்லூரி விடுதியிலேயே இருந்து நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பி.என்.பாலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தினர். இதில் இந்நிலையில் இறந்த ரூபா ஸ்ரீ தந்தை மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிந்த இறந்த ரூபாஸ்ரீ செல்போன் மற்றும் அதிலிருந்த தரவுகளை கல்லூரியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முன்னதாக தற்கொலைக்கு முன்பு ரூபா ஸ்ரீ தனது அக்காவிற்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியதும் அதில், அம்மா.. அப்பா.. உடம்பை பார்த்துக்கோங்க. நான் படிக்கும் கல்லூரியில் ஆசிரியர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் என்னை போல் பல மாணவிகள் இதே நிலையில் உள்ளனர்.
கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம் என்றால் ஆசிரியர்களே இதில் இருப்பதால் என்ன செய்வதேன்று தெரியவில்லை. எனது போட்டோவை வைத்து சமூக வளைதளத்தில் பதிவு செய்வதாக மிரட்டுகிறார்கள். இந்த உண்மை வெளியே தெரிய வேண்டும் அதனால் தான் இந்த முடிவு எடுக்கிறேன். “அம்மா.. அப்பா.. உடம்பை பார்த்துக்கோ. அக்கா மாமா வாழ்த்துக்கள் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்கவும். தங்கைக்கு உன் எதிர்காலத்தில் கவனம் செலுத்து. படிப்பில் உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய் என தெரிவித்திருந்தார்.
போலீசார் விசாரனையில் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். இதுகுறித்து விசாகப்பட்டினம் காவல் துணை ஆணையர் விஎன் மணிகண்டா செய்தியாளர்களிடம் கூறுகையில் மாணவி தற்கொலைக்கு காரணம் கல்லூரியில் உள்ள 250 மாணவிகளிடம் தனிதனியாக பல கேள்விகளுடன் பேப்பர் வழங்கி அதில் அவர்களுக்கு தெரிந்ததை எழுதி தரும்படி கூறினோம்.
இதில் சிலர் அவ்வாறு இல்லை என்றும் சில மாணவிகள் வேதியியல் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணி புரியும் நுனேலா சங்கர் ராவ் வேதியியல் பயிற்சி வகுப்பில் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாவும் தனக்கு ஒத்துழைக்காவிட்டால் மதிப்பெண் குறைத்து விடுவதாக மிரட்டுவதாக தெரிவித்தனர்.
எனவே ரூபாஸ்ரீ உள்ளிட்ட பல மாணவிக்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டது சங்கர் ராவ் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவி கல்லூரி விடுதியில் இருந்தும் அதனை சரியாக கவனிக்காமல் இருந்ததும் தற்கொலை முன்பு கூட மாணவி மாடியில் ஏறி தற்கொலை செய்து கொண்டது சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது.
எனவே கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம் தெளிவாக உள்ளது. எனவே கல்லூரி நிர்வாகதை சேர்ந்த சங்கர் வர்மா, முதல்வர் ஜி. பானு பிரவீன், ஹாஸ்டல் வார்டன் வி.உஷா ராணி மற்றும் விடுதி காப்பாளர் வி. பிரதீப் குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.